திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை(டிச.,16) முதல் ஜன.,14 வரை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு சாத்தப்படும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.