பதிவு செய்த நாள்
15
டிச
2014
02:12
கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலையில்நடப்பது போன்று இங்கும் மண்டல பூஜை, ஆராட்டுவிழா, பேட்டை துள்ளல் ஆகியவைவிமரிசையாக நடைபெறும்.
வருகிற டிச., 18 வியாழக்கிழமை அன்று காலை 6 மணியளவில் காப்புகட்டுதல் வைபவமும்,டிச., 27 சனிக்கிழமையன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி பின்னர்முத்துநாச்சியம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பேட்டை துள்ளல் ஆரம்பமாகி வல்லபை கோயிலின்பின்புறமுள்ள பஸ்மக்குளத்தில் நீராடி உற்சவரை தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழாவும்பின்னர் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, பஜனை, அன்னதானமும், மாலை 4 மணியளவில்சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்சி நடைபெறும்.இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்பர். இங்கு ஒவ்வொரு ஆங்கில மாதமும்முதல் ஞாயிற்றுக்கிழமை உலகநன்மைக்கான கூட்டுவழிபாடும் அன்னதானம் நடைபெறும்.கோயிலின் சார்பாக ஏழைகளுக்கு மருத்துவ, புத்தாடை, கல்வி உதவிகள், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்பது குறித்த பிரச்சாரமும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை குருசாமி மோகன்சாமி,வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.