கீழக்கரை,திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பத்மாஸனித்தாயார் சன்னதியில் உலக நன்மைக்கான சிறப்பு பூஜையும், விஷ்ணு, மகாலெட்சுமிக்கான சகஸ்ரநாம அர்ச்சனையினை டிச. 12 முதல் டிச. 14 வரை ஒருலட்சம் அளவில் கடந்த மூன்று நாட்களாக வரை குங்குமத்தால் அர்ச்சனைசெய்யப்பட்டது. வெளியூர், உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர்பூஜையில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும்பத்மாஸனித்தாயார் கைங்கர்யா சபாவினர் செய்திருந்தனர்.