விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி காலபைரவருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியையொட்டி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நேற்று முன் தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், 7:00 மணிக்கு காலபைரவர் புஷ்பங்களால் ஜோடிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மகா தீபாராதனை, கலச புறப்பாடு, கலசதீர்த்தம் நடந்தது.