விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் பைரவர் ஜெயந்தி வேள்வி நடந்தது. தேய் பிறை அஷ்டமி மற்றும் பைரவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் , சனி பெயர்ச்சியை முன்னிட்டும் சிறப்பு யாகம் நடந்தது. பைரவருக்கு சிறப்பு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்தது. பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . ரவி குருக்கள் தலைமையில் குழுவினர் வேள்வி மற்றும் பூஜைகளை செய்தனர். பூஜை ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி , முத்துரெட்டி செய்திருந்தனர் .