விழுப்புரம்: வளவனூர் ஜெகன்னாதீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. வளவனூர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள, அபிராமி அம்பிகா சமேத ஜெகன்னாதீஸ்வரர் கோவிலில் இன்று (16ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருட்சிக ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு, இன்று மதியம் 2:44 மணிக்கு, சனி பகவானுக்கு தில ஹோமமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.