சோழவந்தான் : சோழவந்தான் அக்ர ஹாரம் பக்தர்கள் சார்பில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் அரங்கில் மழைவேண்டி, உலகநன்மைக்காக கோலாட்ட உற்சவம் நடந்தது. எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளி நிர்வாகி வள்ளிமயில் துவக்கினார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவு 10 மணிக்கு வைகை ஆற்றில் எழுந்தருளிய சத்தியபாமா, ருக்மணி, கிருஷ்ணன் சுவாமி முன் முளைப்பாரி, மண்பசு, கன்று பொம்மை கரைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.