அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் மற்றும் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு நடை திறக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி வரதராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று(டிச., 16 ) முதல் ஜன., 14 வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 சாத்தப்படும். மாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு சாத்தப்படும். தல்லாகுளம் கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11.30க்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவித்தார்.