Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகர்கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா! கிறிஸ்துமஸ் கால சிந்தனை 4! கிறிஸ்துமஸ் கால சிந்தனை 4!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவணை வினியோகத்தில் கட்டுப்பாடு: ஒருவருக்கு 10 டின் மட்டுமே !
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2014
12:12

சபரிமலை: தரக்கட்டுப்பாடு சோதனையால் உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து சபரிமலையில் அரவணை வினியோகத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு 10 டின் அரவணை மட்டுமே வழங்கப்படுகிறது.

சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை. ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய் இதில் பயன்படுத்தப்படுகிறது. நடப்பு மண்டல சீசன் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது என்றாலும் அக்டோபர் இறுதியிலேயே அரவணை தயாரிப்பு தொடங்கி விட்டது. சீசன் தொடங்குவதற்குள் 25 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டது. ஒருநாள் சராசரியாக 50 ஆயிரம் டின்னுக்கும் அதிகமான அரவணை விற்பனையானது. இதனால் ஸ்டாக் குறைந்து விட்டது. அதே நேரத்தில் ஸ்டாக் குறைந்ததற்கு ஈடாக அரவணை உற்பத்தி ஆகவில்லை. காரணம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அரவணையை தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதால், அரவணை ஸ்டாக் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் இரண்டு லட்சம் டின் வரை உற்பத்தியாக வேண்டிய இடத்தில் தற்போது 1.20 லட்சம் டின் அரவணை மட்டுமே உற்பத்தியாகிறது. சர்க்கரையில் உள்ள இனிப்பை பொறுத்து 16 சதவீதம் வரை நீர்தன்மை இருக்கலாம் என்றும் அதனால் பாதிப்பு இருக்காது என்பது தேவசம்போர்டின் வாதம். ஆனால் அதை உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இதை தொடர்ந்து தேவசம்போர்டு அதிகாரிகள் ஐகோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து 23ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நாட்களில் அரவணை இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar