Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணாடம், மார்கழி மாத பூஜை! சிறப்பு மிளகு மகா ஹோமம்! சிறப்பு மிளகு மகா ஹோமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2014
01:12

விருத்தாசலம், சனிப் பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.மார்கழி 1ம் நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 2:50 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார்.

இதையொட்டி, விருத்தாசலத்தில் சனிப் பெயர்ச்சி பரிகார சனீஸ்வர மகா யாகப் பெருவிழா, கடந்த 15ம் @ததி காலை கணபதி, கோ பூஜையுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவானுக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஒன்பது கலசங்கள் வைத்து பரிகார சங்கல்பம், நவக்கிரஹ ஹோமம், முதல் கால பூஜை நடந்தது.தொடர்ந்து, நேற்று  முன்தினம் காலை 8:30 மணிக்கு சங்கல்ப பரிகார மகா யாகம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, பரிகார பூஜை நடந்தன.

விருத்தகிரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் பரிகார ராசிகள், நட்சத்திரங்களுக்கு பூஜை செய்தனர்.விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. சனி பகவானுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தும், எள், நெய் தீபமிட்டும் வழிபட்டனர். தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரி உடனுறை ஆதிசக்தீஸ்வரர், கருவேப்பிலங்குறிச்சி ரோடு ஏகநாயகர், மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர், பெண்ணாடம் அழகிய காதலியம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில்களிலும் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar