பதிவு செய்த நாள்
18
டிச
2014
02:12
சென்னிமலை : சென்னிமலை, எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, வரும், 25ம் தேதி காலை நடக்கிறது.
சென்னிமலையில் இருந்து, காங்கேயம் மெயின் ரோட்டில், சென்னிமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடக்கும்.இந்தாண்டு பொங்கல் விழா, டிச., 17ம் தேதி இரவு, 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவுங்குகிறது. அது முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. 23ம் தேதி இரவு, கும்பம் பாலித்தல், 25ம் தேதி காலை முதல் பொங்கல் விழா நடக்கிறது. அன்று பொங்கல் வைத்து, நகரை காப்பாற்றும் மாகாளி அம்மனுக்கு ஆடு, கோழி பலி கொடுத்து வழிபடுவர். வெள்ளிகிழமை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.