பதிவு செய்த நாள்
19
டிச
2014
01:12
புதுச்சேரி: வன்னியப் பெருமாள் கோவிலில், மார்கழி மகோற்சவ விழா துவங்கியது.
முதலியார்பேட்டையில், வன்னியப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மார்கழி மாதத்தை முன்னிட்டு, மூன்றாம் ஆண்டு மகோற்சவ விழா, மார்கழி 1ம் தேதியன்று துவங்கியது.
வரும் ஜனவரி 14ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தினசரி மாலை 6:00 மணியிலிருந்து, 7:00 மணி வரை, உபன்யாசம், 7:00 முதல், 9:00 மணி வரை, நடனம், பஜனை, இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.