அன்னுார் : அன்னுார் ஐயப்பன் கோவில், திருவிழாவில் யானை ஊர்வலம் நடக்கிறது. அன்னுார், ஐயப்பன் கோவிலில் 45ம்ஆண்டு ஐயப்பன் திருவிழா 16ம் தேதி வாஸ்து பூஜையுடன் துவங்கியது. 17ம் தேதி அதிகாலையில் முதல்கால ஹோமமும், கொடியேற்றமும், மாலையில் இரண்டாம் கால ஹோமமும் நடந்தது. இன்று மகா கணபதி ஹோமமும், 6.00 மணிக்கு, ஐயப்பனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (20ம் தேதி) மதியம் 1.00 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் குழு மற்றும் ஐயப்ப பக்தர்கள் பஜனையுடன், புலி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா அன்னுாரின் முக்கிய வீதிகள் வழியாக செல்கிறது.