பதிவு செய்த நாள்
19
டிச
2014
01:12
போளிவாக்கம்: மணவாளநகர் அடுத்த, போளிவாக்கத்தில், வரும் 21ம் தேதி, காயத்ரி மகா யாகம் நடைபெற உள்ளது.
உலக அமைதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், வரும், 21ம் தேதி, திருவள்ளூர் அடுத்த, போளிவாக்கம் சத்திரம் விநாயகர் கோவில் அருகில், ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, காயத்ரி மகாயாகம் நடைபெற உள்ளது. அன்று, காலை 10:30 மணிக்கு, துவங்கும் காயத்ரி மகா யாகம், 12:30 மணிக்கு நிறைவு பெறும். இதேபோல், பிரதி வியாழக்கிழமை தோறும், திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் கன்னைய நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், காலை 11:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை, காயத்ரி மகா யாகம் நடைபெறும்