பதிவு செய்த நாள்
19
டிச
2014
01:12
ராசிபுரம் : வரும், 21ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா நடக்கிறது.
ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோவிலின் உப கோயிலான, அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 21ம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. முன்னதாக, இன்றிரவு, 7.30 மணிக்கு பால் அபிஷேகம், வெண்ணெய் சாற்றுதல் நடக்கிறது. நாளை காலை, 7 மணிக்கு வெண்ணெய் அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராமர் பாதம், நவ மாருதி ஆகிய ஸ்வாமிகளுக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு விஷ்வக்னேஷ ஆராதனை, புண்யாகவாஜனம், கல ஆவாஹணம், வேத பாராயணம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.வரும், 21ம் தேதி, அதிகாலை 4.30 மணிக்கு விஷ்வக்ஷேன் ஆராதனை, வேத பாராயணம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி பூஜையும், காலை, 6 மணிக்கு மூலவர், உற்சவர், விசேச திருமஞ்சனம் அலங்காரம், கூட்டு பிரார்த்தனை, மஹா தீபாரதனை நடக்கிறது.தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு உற்சவர் ஆஞ்சநேயர் ஸ்வாமி, திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.