திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், சந்தப்பேட்டை அய்யப்பன் கோவிலில் எட்டாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, வீரஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள வீரமணிகண்டன் கோவிலில் எட்டாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. காலை 6.00 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தென்பெண்ணையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை அடைந்தது. கோவில் வளாகத்தில் பஜனை, மதியம் 1.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. ராஜேந்திரகுருசாமி தலைமையில் நடந்த இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.