பதிவு செய்த நாள்
22
டிச
2014
03:12
வேடசந்தூர் : வேடசந்தூர் அகோபில நரசிங்கபெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. வீர ஆஞ்சநேயருக்கு 16 வகையான மஹா அபிஷேகம், வடமாலை சாற்றுதல் பிரசாதம் வழங்குதல் நடந்தன. மார்கழி மாதத்தை முன்னிட்டு, தினமும் திருவிழக்கு பூஜை, மஹா திருமஞ்சனம், அபிஷேகமும், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர்.
* ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள்கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.ரெட்டியார்சத்திரம்: அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, விசேஷ அபிஷேகத்துடன் ஏகாந்தசேவை நடந்தது. வீர ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடந்தது. வடை, துளசி, கதம்ப மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அணைப்பட்டியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. துளசிமாலை, வடைமாலை, வெண்ணெய் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் வைகையாற்றில் நீராடி மகிழ்ந்தனர். இதில் நிலக்கோட்டை, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, கொடைரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் செல்விமுருகன், மேட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் காட்டுராஜா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த டி.எஸ்.பி.,கருப்பசாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சின்னாளப்பட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. பெருமானுக்கு 1008 ஜிலேபி மாலை அணிவிக்கப்பட்டது. வஜ்ர அங்கி கவச சேவையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
* திண்டுக்கல் எம்.வி. எம்., நகர் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில் மாலை 6:30 மணிக்கு பெருமானுக்கு 10,008 வடைகளுடன் மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சாணார்பட்டி: சாணார்பட்டி வி.மேட்டுப்பட்டியில் கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அபிஷேகமும்,அர்ச்சனை செய்யப்பட்டது. மலர்கள்,துள சி,வெற்றிலை,வடை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கதிர்நரசிங்கப் பெருமாள், தாயார்கள் ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார மும்,அர்ச்சனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர் கள் பங்கேற்று அனுமனை வழிப்பட் டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்கா வலர்கள் நரசிம்மன்,ராஜசிம்மன்,கண்ணன் மற்றும் மாதுகண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.