வேணுகோபால சுவாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்காப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2014 12:12
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரமும் வடை வெற்றிலை மாலைகள் சார்த்தப்பட்டு பூஜை நடந்தது. அமாவாசை என்பதால் பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு எதிர்சேவை சாதித்தார். தொடர்ந்து, கோவிலை வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் ஆஞ்சநேயருக்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளிக்காப்பு பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோதண்டராமர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந் தது.