பதிவு செய்த நாள்
26
டிச
2014
01:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிச னம் மகா உற்சவம் நாளை (27ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் துவஜாரோகணம் கொடியேற்ற சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நாளை (27ம் தேதி) காலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் பிரகாரம் புறப்பாடு செய்து நடராஜர் சுவாமி சன்னதிக்கு எதிரில் எழுந்தருளி, கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ சுப்ரமணிய தீட்சிதர் காலை 8:00 மணிக்கு உற்சவ கொடியை ஏற்றி துவக்கி வைக்கிறார். தினமும் சுவாமி மற் றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, மாலையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வாகன புறப்பாடு செய்து வீதியுலா நடக்கிறது. முக்கிய உற்சவமான 31ம் தேதி தெருவடைச் சான், ஜனவரி 4ம் தேதி விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டம் நடக்கிறது. மாலை சிவகாம சுந் தரி சமேத நடராஜர் சுவாமிகள் தேரில் இருந்து இறங்கி ராஜசபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருளி, விசேஷ லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. 5ம் தேதி மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனத்தையொட்டி சிற்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூ ர்த்திகள் புறப்பாடு செய்து தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் நடனம் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் மகா தரிசனமும், நடராஜர் சித்சபா பிரவேசமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.