திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில்களில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தன. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு யோகிராம்பாபாஜி சுவாமிகள் கோவிலில் வரு ஷாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. காலை 10:00 மணிக்கு ருத்ர ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோல் உளுந்துõர் பேட்டை அடுத்த மல்லிகா கிராமத்திலுள்ள தீபேஸ்வரி சமேத தீபேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. வேலூர் பாலமதிமலை மடாதிபதி ராமகிருஷ்ணசாது, யோகி சங்கர் சுரேஷ்நரேந்தர் சுவாமிகள், அருணாச்சல குருக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர்.