வடமதுரை:வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள விநாயகர், முருகன், ஐயப்பன், கருப்பணசாமி, கருத்தசாமி கோயிலில் கடந்த நவ.9ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மண்டல பூஜை நடந்தது. கோயில் தலைவர் ஆர்.கே.பெருமாள், தலைமை குருநாதர் அழகர்சாமி, திருப்பணிக்குழு தலைவர் சண்முகவேலு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
எரியோடு ஸ்ரீதேவி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. 108 சங்காபிஷேகம், மாரியம்மன், ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.