பதிவு செய்த நாள்
29
டிச
2014
12:12
ஊட்டி : ஊட்டி காந்தல் சபரிமலை மண்டல குழுவினர் சார்பில், மூவுலகரசியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு திருவிழா நடந்தது.
கடந்த 24ம் தேதி காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலை, 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு கலச ஆவாகனம், மகா கணபதி ஹோமம், பகல், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு சரபேந்திரா நாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக, 26ம் தேதி காலை,7:00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமம், பகல்,12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம், 3:30 மணிக்கு ஸ்ரீமணிகண்ட வேத சாஸ்தா திருவீதி புறப்பாடு, மாலை, 6:00 மணிக்கு படிபூஜை, இரவு, தீபாராதனையும் நடந்தது. மாலை அணிந்த பக்தர்களின் ஐயப்ப பஜனை பாடல்கள் அனைவரையும் பரவசப்படுத்தியது.
தொடர்ந்து மூவுலகரசியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.ஜன.,1ம் தேதி, மூவுலகரசியம்மனுக்கு காலை, 5:00 மணிமுதல் சிறப்பு ஹோமமும் மகா தீபாராதனையும் நடக்கிறது. 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மகரஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை சபரிமலை மண்டல பூஜை குழுவினர் செய்துள்ளனர்.