நாகமலை : நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ., காலனி திருமுருகன் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடந்தது.இதையொட்டி 108 திவ்ய கலசம் மற்றும் நெய் அபிஷேகங்கள் ராஜாபட்டர் தலைமையில் நடந்தன. பிறகு புஷ்பாஞ்சலி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி ஊர்வலமாக சென்று அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் என்.ஜி.ஓ., காலனி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.