பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முதலாமாண்டு மண்டல பூஜையையொட்டி, அய்யப்பசாமி ஊர்வலம் நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம், காமாட்சியம்மன் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து கோமாதா பூஜை, கன்னிபூஜை நடந்தன. மதியம் சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை, 5:00 மணிக்கு காமாட்சியம்மன் கோவில் வளாகத்திலிருந்து அய்யப்பசாமியின் உருவப்படம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை மற்றும் கருப்பசாமியின் குதிரை அலங்கரிக்கப்பட்டு, செண்டை சிங்காரி மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, மகாலட்சுமி கோவில் அருகே, 108 விளக்குகள் ஊர்வலத்துத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தத்வமஸி ஐயப்பன் பஜனை குழு மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்