திருச்சி: பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இன்று அதி் காலை பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து ராப்பத்து விழா நடைபெற்று வந்தது.
இந்நிலையி்ல் இந்த விழாவி்ன முத்தாய்பாக பரமபதவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்களின் ரங்காநாதா ,ரங்கநாதா என கோஷத்துடன் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து, பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு பக்தர்களுடன் பரமபத வாசலை கடந்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.