Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் ... மார்கழி வழிபாடு! மார்கழி வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழக்கரை காய்ச்சல், தலைவலி போக்கும் சேதுக்கரை பெருமாள் கோயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
11:01

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம்அறியப்படாத பழமையான கோயிலான சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்தஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டுமூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்தூண்கள்பராமரிப்பின்றி கடும் மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் இவற்றில் இருந்து தெய்வாதீனமாக நிற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.

Default Image
Next News

இதுகுறித்து ராமநாதபுரம் வைணவத்திருத்தல பக்திநெறி தலைவர் எல்.ஐ.சி., நாராயணன் கூறும் போது, ""ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில்3வது கி.மீட்டரில் பெரியதொரு ஆலமரத்தின் எதிரே கருவேல மரங்களால் மறைக்கப்பட்ட நிலையில்அவ்வழியே கடந்து செல்வோருக்கு புலப்படாத நிலையில் உள்ளது சின்னக்கோயில் என அழைக்கப்படும்ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். "சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.

கோயிலின் சிறப்பு: தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறார்.சன்னதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற சக்கரத்திற்கு பதிலாக சங்கும் இடமாறி உள்ளது. சிலையை சுற்றிலும் பார்டர் போல்பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினைகுணப்படுத்துவதாக நம்பப்படுகிறது என்றார்.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில்
300 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் தை மாதத்தில் தொடங்கி பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனை ரெகுநாதபட்டர் ஒருகால பூஜை செய்து பராமரித்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar