பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
காஞ்சிபுரம் மாவட்டவாசிகள், புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர். கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பட்டாசு வெடித்துஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, நேற்று முன்தினம் இரவு முதல் நடந்தன. நகர வீதிகளில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இளைஞர்கள் கொண்டாடினர். ஒருவருக்கொருவர், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ரத்தின அங்கி சேவை உற்சவம், அதிகாலை, 4:00 மணிக்கு நடந்தது. இதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை, 3:00 மணி முதலே, கோவில் வளாகத்தில் குவிந்தனர். திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், நள்ளிரவு, 12:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. விடியற்காலை, 4:00 மணியளவில், மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கந்தனை வழிபட்டனர்.
வகனங்களால் ஸ்தம்பிப்புதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர் கோவில்களில், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் மாலை முதலே, நுாற்றுக்கணக்கானோர் குவியத் துவங்கினர். இங்கு இயங்கி வரும் சுற்றுலா விடுதிகள், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன. பெரும்பாலானோர், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் நள்ளிரவு வரை படையெடுக்க, கிழக்கு கடற்கரை சாலை, வாகனங்களால் ஸ்தம்பித்தது.