திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு, சொர்க்கவாசல் வழியே வந்து அருள் பாலித்தார். பூஜைகளை சீனுவாச பட்டாச்சாரியர் தலைமையில் ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியர்கள் செய்தனர். ராம் டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் தீர்த்தக்குளம் ரவிச்சந்திரன் உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.