பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
உளுந்தூர்பேட்டை: வெள்ளையூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தன. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராமசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அய்யாதுரை, வி.ஏ.ஓ.,அன்பழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் கொளஞ்சிமனோகரன், தெய்வீகன், திருமுருகன் செய்திருந்தனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ராஜநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திருப்பு விழா நேற்று காலை 5.30 மணிக்கு நடந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தன. சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். பாண்டு ரங்கன் தலைமையிலான பஜனை கோஷ்டியினரின் பஜனை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமதாஸ், பாண்டுரங்கன், ராஜேந்திரன், செல்வம், மனவாளன் மற்றும் மக்கள் செய்திருந்தனர். உளுந்தூர்பேட்டை கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று காலை 5 மணிக்கு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஏகாதசி பேரவை மற்றும் ஆண்டாள் சேவை குழுவினர் செய்திருந்தனர்.