பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
பவானி : பவானி, யுவஜன பக்த பஜன சபா சார்பில், 66வது ஆண்டாக ராதா கல்யாண உற்சவம் வரும், பத்து, 11 ஆகிய தேதிகளில் பவானி, அக்ரஹார வீதியில் உள்ள ரோட்டரி ஹாலில் நடக்கிறது. வரும், பத்தாம் தேதி காலை, 8.30 மணிக்கு உஞ்ச விருத்தி, மாலை அஷ்ட்டபதி, இரவு, ஒன்பது மணிக்கு அஷ்டப்பதி திவ்யநாமம் நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 9.30 மணிக்கு ராதா கல்யாணம், மதியம், 1.30 மணிக்கு திருமாங்கல்யதாரணம், இரவு, எட்டு மணிக்கு ஆஞ்சநேய உற்சவம், மங்கள ஹாரத்தி ஆகியவை நடைபெறும்.