ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகர், வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த திருவிழாவில், நிலக்கடலையை கோவில் கோபுரம் மீது வீசி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓசூர் ராஜகணபதி நகரில், வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நிலக்கடலை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர். மேலும், கோவில் கோபுரம் மீது, நிலக்கடலையை வீசி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.