கள்ளக்குறிச்சி: புத்தாண்டையொட்டி கோவில்கள் மற்றும் கிறிஸ் தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில், புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், கமலாநேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், செம்பொற்ஜோதிநாதர் கோவில், விருகாவூர் சீனிவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதாலஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில், சடையம்பட்டு சிவன் கோவில், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தே ஆலயம், கோட்டைமேடு மெத்தடிஸ் தமிழ்த்திருச்சபையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. புனித ஜெப மாலை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஜோசப்ராஜியும், புனித ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் போதகர் பெஞ்சமின் சுதாகர், மெத்தடிஸ் தமிழ்த்திருச்சபையில் தங்கரத்தினம் வழிபாடுகளை செய்து வைத்தனர்.