முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2015 10:01
திருப்புவனம்: சிவகங்கை அருகே திருப்புவனம் லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் முள்படுக்கையில் அமர்ந்து நாகராணி என்ற பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
இவர் ஆண்டு தோறும் மார்கழி முதல்தேதி காப்புக்கட்டி விரதமிருந்து ஏழு வகை முட்களை 5 அடி உயரத்திற்கு பரப்பி அதன் மேல் படுத்து அருள்வாக்கு கூறுவார். இந்தாண்டு அருள்வாக்கு நிகழ்வு நேற்று நடந்தது. முன்னதாக முத்துமாரியம்மனுக்கும், மாசானியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின் முள்படுக்கைக்கு பூஜை செய்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. நாகராணி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்ட பின் கோயிலை சாமியாடி வலம் வந்தார். பகல் 12 மணிக்கு முள்படுக்கையில் ஏறி சாமியாடி ஒரு மணி நேரம் தவம் செய்தபின் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ஏற்பாடுகளை மாரிமுத்து சாமிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.