பதிவு செய்த நாள்
03
ஜன
2015
10:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டின் முதலாவது பிரதோஷ விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்பு உள்ள மஹா நந்திக்கு கங்கை நீர், திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, இளநீர், பால், சந்தணம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.
விழாவில் தஞ்சை நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வழிபட்டனர். புத்தாண்டின் முதல் பிரதோஷம் என்பதால், ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, மாநகர மேயர் சாவித்திரி, தலைமையில் அ.தி.மு.க., வினர் ஏராளமானபேர் பங்கேற்று, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பிரதோஷ விழாவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆருத்ர வித்யாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.