பதிவு செய்த நாள்
03
ஜன
2015
10:01
கோபி: கோபி, மேவாணி அருகே தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆராட்டு பெருவிழா மற்றும் ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. முதல்நாள் நிகழ்வாக, செண்டை மேளத்துடன் ஆராட்டு பெருவிழா நடந்தது.புத்தாண்டு அன்று காலை, 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை நடந்தது. பகல், 12 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.இரண்டாவது நாள் நிகழ்வாக நேற்று காலை, 8 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மல்லி, சாமந்தி, தாமரை, துளசி, வெண்தாமரை, மருகு உள்ளிட்ட, 18 வகையான, 400 கிலோ பூக்கள் மூலம் ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. பகல், 12.30 மணிக்கு அன்னதானம், சிறப்பு படி பூஜை நடந்தது.