Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோவில்களில் புத்தாண்டு ... திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு! திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2015
11:01

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் செய்தனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சுவாமி கோவில் உலா நடந்தது. உபயதாரர் சம்பத், சீதா, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி உட்பட கலந்து கொண்டனர். அர்ச்சகர் செல்வம் பூஜைகளை செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar