செஞ்சி: செஞ்சி பகுதி கோவில்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. செஞ்சி காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கருணா சாயிபாபா மற்றும் ராஜ ராஜேஸ் வரிக்கு மகா புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு கருணா சாயி பாபா பல்லக்கில் கோவில் உலா நடந்தது. கிருஷ்ணாபுரம் வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நவசண்டி ஹோமம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு, பிரசாத விநியோகம் நடந்தது. திருவண்ணாமலை ரோடு ராஜ செல்வ விநாகர் கோவிலில் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், தட்சணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். விநாயகர், தட்சணாமூர்த்திக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். மேலச்சேரி பிரகன்ன நாயகி சமேத மத்திலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.