பழநி கோயில் சுவாமி படங்கள் புதிய காலண்டர்கள் அறிமுகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2015 12:01
பழநி: பழநிகோயில் சுவாமி படங்களுடன் புதிய மாதாந்திர காலண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் பழநிகோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில் மூலவர் ஞானதண்டாயுதபாணியின் ராஜ அலங்கார படத்துடன் கூடிய மாதாந்திர காலண்டர் ரூ. 35 க்கு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு பக்தர்களை கவரும் வகையில் பழநி கோயில் நிர்வாகம் புதிய காலண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் தாளில் பழநிமலையின் முழுத்தோற்றத்துடன் நான்கு சுவாமி படங்களும், அடுத்துள்ள நான்கு தாள்களில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி தெய்வானை, திருஆவினன்குடி குழந்தைவேலாயுதசுவாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"வழக்கமாக அச்சிடப்படும் காலண்டர் முறையை மாற்றி பக்தர்களை பரவசப்படுத்தும் வகையில் திருஆவினன்குடிகோயில் உற்சவர், மலைக்கோயில் மூலவர், உற்சவர்கள் என நான்கு சுவாமி படங்களுடன் கூடிய காலண்டர் வெளியிட்டுள்ளோம். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது, என்றார்.