தேவதானப்பட்டி : ஜெயமங்கலம் சொக்கநாதர்கோயிலில் திருவா திரையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் வராகநதிக்கரையில் சொக்க நாதர் கோயில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில் நேற்று மாலை திருவாதிரையை முன்னிட்டு சோமாஸ் கந்தர், ஸ்கந்தர், அம்பாள், பாலமுருகன், பிரதோஷ விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். சந்திரமவுலிசிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.