செஞ்சி: செஞ்சியை அடுத்த மேலச்சேரி சாவடியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மாங்கல்ய துர்கையம்மன் கோவிலில் இருமுடி மற்றும் தீமிதி விழா நடந்தது. இதையொட்டி கடந்த 2ம் தேதி கோ பூஜை, கணபதி பூஜையும், காப்பு அணிவித்தலும் நடந்தது. 3ம் தேதி 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம், 9 மணிக்கு சக்தி கரக ஊர்வலம், இரவு 8 மணிக்கு சக்தி பூஜை நடந்தது. 4ம் தேதி காலை இருமுடி கட்டுதலும், 10 மணிக்கு உற்சவர் இ ருமுடி புறப்பாடு நடந்தது. இரவு 7 மணிக்கு அக்னியை மடியில் சுமந்து கோபிநாதன் தலைமையில் தீமிதித்தனர்.நேற்று காலை 7 மணிக்கு இருமுடி சாற்றுதலும், நெய் அபிஷேகமும் நடந்தது. இரவு 7 மணிக்கு உலக நன்மைக்காக சாந்தி யாகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.