பதிவு செய்த நாள்
07
ஜன
2015
11:01
சிதம்பரம்: மயிலாடுத்துறை அடுத்த தருமபுரம் தருமையாதீனம் சார்பில் நடராஜ பெருமானுக்கு 49 லட்சம் ரூபாய் மதிப்பில் 91 கிலோ வெள்ளி அ பிஷேக வேதிகை (பீடம்), அபிஷேக வெள்ளி கலசம் வழங்குதல் மற்றும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி சிடி வெளியீட்டு விழா சிதம்பரத்தில் நடந்தது. விழாவிற்கு, பொது தீட்சிதர்கள் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமை தாங்கினார். தருமையாதீனம் குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், புதிய வெள்ளி அபிஷேக பீடம், வெள்ளி அபிஷேக கலசம் இரண்டையும் பாஸ்கர தீட்சிதரிடம் ஒப்படைத்தார். பின்னர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி குறுந்தகட்டை, வெளியிட்டார். இதனை கலெக்டர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், சேலம் சப் கலெக்டர் அரவிந்த், தொழிலதிபர் சிவாஜி, திருச்சி மவுன மடம் கட்டளை தம்பிரான் குமாரசாமி தம்பிரான், திருப்பனந்தாள் காசி மடம் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான், திருவையாறு கட்டளை ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான், திருக்கடையூர் கட்டளை திருஞானசம்மந்தர் தம்பிரான், நகர பிரமுகர்கள், வழக்கறிஞர் வேல்முருகன், டாக்டர் முத்துக்குமரன், தொழிலதிபர்கள் கேதார்நாதன், சுவேதாகுமார், தீட்சிதர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.