சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2015 11:01
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து 5ம் நாள் உற்சவத்தில் பெருமாள் மன்மத கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 5ம் நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி மாலை மூலவர் வரதராஜ பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்து, இரவு 7:00 மணியளவில் உற்சவர் பெருமாள் மன்மதகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.