பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
12:06
திருநெல்வேலி : மேலப்பாளையம் செய்யது அப்துல் ரகுமான் ஐதூருஸ் பூக்கோயா தங்கள் தர்கா 149வது ஆண்டு கந்தூரி விழா நாளை (15ம் தேதி) துவங்குகிறது. மேலப்பாளையம் செய்யது அப்துல் ரகுமான் ஐதூருஸ் பூக்கோயா தங்கள் 149வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு 16ம் தேதி மாலை 4 மணிக்கு யானை மீது கொடி ஊர்வலம் துவங்குகிறது. மேளதாளங்கள், சிலம்பாட்டம், வானவேடிக்கையுடன் இரவு 10 மணி வரை ஊர்வலம் நடக்கிறது. ஞானியரப்பா பெரிய தெரு, சின்ன தெரு, அக்பர் தெரு, தெற்கு ரகுமானியாபுரம், வடக்கு ரகுமானியாபுரம், சாயன்தரகன் தெரு, ஆசூரா மேலத்தெரு, கீழத்தெரு, தெற்கு தைக்கா தெரு வழியாக தர்காவை வந்தடைந்தவுடன் கொடியேற்றப்படும். அதன்பின்னர் தர்காவில் திக்ரு மஜ்லீஸ் (தியானம்), ராத்தீபு சரீபு (இறைவேதம் படித்தல்) நடைபெறும்.