திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2015 10:01
தூத்துக்குடி: பொங்கல் அன்று திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந் தூர் முருகன் கோயிலில் தை மாதப்பிறப்பான பொங்கல் அன்று ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜன.,15 அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, கால வேளை பூஜைகள் நடக்கும்.தொடர்ந்து விடுமுறை வருவதால் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என கோயில் நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.