பதிவு செய்த நாள்
17
ஜன
2015
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், நந்தியம் பெருமான், 108 வகையான காய், கனி, இனிப்பு, பிஸ்கட், சாக்லெட் என விதவிதமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டன.பின்னர், அண்ணாமலையார், சமேத உண்ணாமுலையம்மன், நந்தியம்பெருமானுக்கம், சூரிய பகவானுக்கும் காட்சி அளிக்கும் விழா நடந்தது. தொடர்ந்து, அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் மாட வீதியில், மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.