திருவாடானையில் எலிகளுக்கு பொங்கல் வைத்து நூதன விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 10:01
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை அருகே உள்ள சிநேகவல்லிபுரம் கிராம மக்கள் ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து எலிகளுக்கு பொங்கல் வைத்து நூதன விழா கொண்டாடினர்.
இது குறித்து சக்திவேல் என்பவர் கூறுகையில்,‘ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல. மத்திய அரசு, மலைகளை குடைந்து, பூமியில் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் மாடுகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழியலாம். பூமியில் வாழும் எலிகள் மட்டும் அழியாமல் வாழட்டும், என்ற நோக்கத்தில் அவைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்,” என்றார். மாட்டுபொங்கல் தினத்தில் எலிகளுக்கு பொங்கல் வைத்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.