பதிவு செய்த நாள்
17
ஜன
2015
11:01
புதுச்சேரி: பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை கடையில், கோவில் கோபுரம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. புதுச்சேரி, கோட்டக்குப்பம், இ.சி.ஆரில், பழங்கால கலைப் பொட்கள் விற்கும் கடைகள் உள்ளன. ஒரு கடையில், கோவில் கோபுரம் ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், வண்டிக்கார தெருவில் இருந்த இரட்டை விநாயகர் கோவில் கோபுரம் அது. பாலம் அமைப்பதற்காக, வண்டிக்காரன் தெருவில் குடியிருப்புகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த இரட்டை விநாயகர் கோவிலையும் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்து, ஹெரிட்டேஜ் கலைப் பொருள் விற்பனை நிர்வாகம், கோபுரத்தை உடையாமல் எடுத்து கொள்ள, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டது. முறையான அனுமதி பெற்று, கோவில் நிர்வாகத்துக்கு உரிய தொகையை செலுத்தி, கோபுரத்தை கிரேன் மூலம் பெயர்த்தெடுத்து புதுச்சேரி கொண்டு வந்து வைத்துள்ளனர். கோபுரத்தில், சுண்ணாம்புக்கல் சிலைகள் உள்ளன. 8 அடி உயரத்தில், ஐந்து டன் எடையுள்ள கோபுரம் கடை வாசலில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை, அந்த வழியாக செல்வோர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.