பதிவு செய்த நாள்
17
ஜன
2015
12:01
திருச்செங்கோடு:கண்கள் கட்டப்பட்ட நிலையில், கோழி பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு விளையாட்டை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர். திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷன் எதிரில், நந்தவனத் தெருவில் தைப்பொங்கலை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில், சிறுவர், சிறுமியர், இளைஞர் மற்றும் பெண்களுக்கு என, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்களுக்கு நவீன ஜல்லிக்கட்டு நடந்தது.அதில், கயிற்றின் ஒரு முனையை கோழியின் காலிலும், மறு முனையை பெண்ணின் காலில் கட்டுவதுடன், அந்த பெண்ணின் கண்களை துணி கொண்டு கட்டி விடுகின்றனர். கண்கள் கட்டிய நிலையில், பெண்கள் தங்கள் கோழியை கண்டுபிடித்து விட்டால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.புதுமையான இந்த நவீன ஜல்லிக்கட்டு விளையாட்டை காண்பதற்காக, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் குவிந்திருந்தனர்.