வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 02:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுபொங்கலை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், காய்கறி, தட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர் நந்திகேஸ்வரர் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நந்திகேஸ்வரருக்கு சோடசோபபச்சார தீபாராதனை நடந்தது.