பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
திருப்பூர்: திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், 70 ஆண்டுக்கு பின், தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.வரும் 22 மாலை 5:00க்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. மாலை 6:00க்கு, டவுன்ஹால் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கும். 23ல் யாக சாலை பிரவேசம், முற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. அடுத்தடுத்த நாட்களில், யாகசாலை பூஜைகளும், வேத பாராயணமும் நடைபெறும்.வரும் 26 காலை 9:45 - 10:00க்குள், மூலவர் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படும். மாலை 5:00க்கு, திருக்கல்யாண உற்சவம், வீதி உலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெற்றிச்செல்வன், சஷ்டி சேவா அறக்கட்டளை தலைவரான துணை மேயர் குணசேகரன், செயலாளர்கள் ஸ்ரீராம், சடையப்பன், பொருளாளர் ராம்குமார் பாலாஜி, நிர்வாகிகள் சபாபதி, சிவசுப்ரமணியம், பன்னீர்செல்வம், வரதராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.